வள்ளிக்கணவன் பேரை | Mantrasokam | Tamil

வள்ளிக்கணவன் பேரைவள்ளிக்கணவன் பேரை வழிப்போக்கன் சொன்னாலும்
உள்ளம் குழயுதடி கிளியே ஊனும் உருகுதடி கிளியே


மாடுமனை போனாலென்ன மக்கள் சுற்றம் போனாலென்ன
கோடிச்செம்பொன் போனாலென்ன கிளியே
குறுநகை போதுமடி முருகன் குறுநகை போதுமடி


கூடிகுலாவி மேத்த குகனோடு வாழ்தந்தெல்லம்
வேடிக்கை அல்லவடி கிளியே வெகுநாளை பாந்தமடி


எங்கும் நிரந்திருப்போன் எட்டியும் எட்டாதிருப்போன்
குங்குமவர்ணனடி கிளியே குமரப்பெருமானடி கிளியே


மாலை வடிவேலவற்கு வரிசையாய் நான் எழுதும்
ஒலைகிருக்காச்சுதே கிளியே உள்ளமும் கிறுக்காச்சுதே கிளியே


கட்டுக்கொடி படர்ந்த கருஉறு காட்டுக்குள்ளே
விட்டு பிரிந்தாரடி கிளியே (என்னை) வேலன் எனும் பெரோனடி ||

Comments